தமிழகம்

தாமரை சின்னம் ஓகே... ஆனா, 1+1: ஜான்பாண்டியன்

செய்திப்பிரிவு

வரும் தேர்தலில் பாஜக சின்னத்தில் தென் மாவட்டங்களில் போட்டியிட விருப்பப் பட்டியலை வழங்கியுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தலா ஒரு சீட் தருமாறு பாஜகவிடம் கோரியுள்ளார்.

இது குறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன், இந்து தமிழ் திசையிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து உள்ளோம். மக்களவை, மாநிலங்களவையில் தலா ஒரு இடம் கேட்டு இருக்கிறோம்.

மக்களவைத் தேர்தலில் பாஜக சின்னத்தில் தென் மாவட்டங்களில் போட்டியிட விருப்பப் பட்டியலை வழங்கி உள்ளோம். இதற்காக, 3 தொகுதிகளில் ஏதாவது ஒன்று வழங்க கோரிக்கை வைத்து இருக்கிறோம். அவர்கள் முடிவு செய்வார்கள். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 10-ம் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT