தமிழகம்

9 வயது சிறுமி கொடூரக் கொலை: புதுச்சேரி அரசின் மீது கட்சியினர், சமூக அமைப்பினர் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை/புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய் யப்பட்டது தொடர்பாக புதுச்சேரி அரசு மீது அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி: புதுச்சேரியில் இதுபோல்நடந்தது இல்லை. முதல்வர் ரங்கசாமி, நமச்சிவாயம் ரவுடிக ளுடன் கைகோர்த்துள்ளனர். ரவுடிகள் பாஜகவில் ஐக்கிய மாக்கியுள்ளனர்.

முதல்வரும், உள்துறை அமைச்சரும்தான் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். மேற்கு வங்கத்தில் வன்கொடுமைக்காக பாஜக மகளிர் அணி போராட்டம் நடத்தினர். இங்கு நடந்த விஷயத் துக்காக போராட்டம் நடத்தாதது ஏன்? நாடகம் ஆடுகிறார்கள். இன்ஸ்பெக்டர், எஸ்ஐ பதவிபெற பணம்தான் புதுச்சேரியில் விளை யாடுகிறது.

பாமக தலைவர் அன்புமணி: மகளிர் தினம் நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வெளியுலகம் அறியாத பிஞ்சு உள்ளத்துக்கு இழைக் கப்பட்டிருக்கும் கொடுமையை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் கஞ்சா பயன்பாடு தலை விரித்தாடுகிறது. கஞ்சா நட மாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய வகையிலும், சிறுமியை தேடுவதில் தீவிரம் காட்டாத வகையிலும் இந்தக் குற்றத்துக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும். இதில் சட்டப்படி தூக்குத் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை பெற்றுத்தர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இதுபோன்றநிகழ்வுகள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்க புதுச்சேரிமாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, போதைப் பொருட்களின் நட மாட்டத்தை கட்டுப்படுத்துவதோடு, சிறுமியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனை வரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண் டனை பெற்றுத்தர வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: ஒருபுறம், ‘வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி’ என்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம்.

இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்: 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதறவைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்தஇதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவை மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் ராமதாஸ்: புதுவை சமுதாயம் கஞ்சா, மது கலாச்சாரத்தால் சீர்கெட்டு வருவதன் விளைவு தான் இப்படிப்பட்ட மரணங்கள். ‘சுற்றுலா வளர்ச்சி’ என்ற பெயரில் சித்தர்கள் பூமியின் புனிதத்தை இந்த அரசு ஏற்கெனவே அழித்து விட்டது. வருமான நோக்கத்தோடு சமுதாயத்தை சீரழிக்க ரங்கசாமி அரசு துணிந்து விட்டது.

அரசு உடனடியாக ஒரு நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மத்திய புலனாய்வுத் துறையும், தேசிய மனித உரிமை ஆணையமும், புதுவை குழந்தை கள் ஆணையமும் தலையிட்டு உரிய விசாரணை செய்ய வேண் டும்.

விசிக புதுச்சேரி முதன்மை செயலாளர் தேவ பொழிலன்: வட மாநிலங்களில் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்களை போல புதுச்சேரியிலும் நடைபெற்று வருவது அதிர்ச்சியை அளிக்கிறது.

புதுச்சேரி மாநில மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறுமியின் படு கொலைக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு புதுச்சேரி அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக புதுச்சேரி செயலாளர் விஜயா: நெஞ்சை உறைய வைக்கும் கொடூர சம்பவம்.பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அரசு ஆதரவுடன் பெருகிவரும் போதை கலாச்சாரத்தால் இளைஞர்கள் சமூக குற்றவாளிகளாக மாறி உள்ளனர். பாஜக கூட்டணி ஆட்சி போதைப் பொருட்கள் நடமாட்டத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அலட்சியம் காட்டி வருகிறது.

பெண் குழந்தை கடத்தி கொலை செ ய்யப்பட்டதற்கு புதுவை அரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும். சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

திமுக மகளிரணி அமைப்பாளர் காயத்ரி: சிறுமி படுகொலைக்கு காவல்துறையின் அலட்சியமான தேடுதல்தான் காரணம். சிறுமி சடலமாக கிடந்த வாய்க்காலுக்கு அருகே கஞ்சா புழக்கம் அதிகமாக இருந்துள்ளது.

எல்லாம் தெரிந்தும் காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி 24 மணி நேரத்திற்குள் சிறுமியை மீட்காதது புதுவையில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே குறிக்கிறது.

குழந்தைகள் நல ஆணையத்துக்கு புதிய நிர் வாகிகளை உடனே நியமனம் செய்ய வேண்டும். முடங்கி கிடக் கும் மகளிர் ஆணையத்திலும் நிர்வாகிகளை உடனே நியமிக்க வேண்டும்.

சிறுமி இறந்தது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

SCROLL FOR NEXT