தமிழகம்

“கோவையில் கமல் போட்டியிட்டால் எங்கள் வேட்பாளர் தோற்கடிப்பார்” - தமிழக பாஜக

செய்திப்பிரிவு

கோவை: கோவை மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, முன்னாள் எம்பி கார்வேந்தன் உள்ளிட்ட குழுவினர் கருத்துகளை கேட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் எஸ்.ஜி.சூர்யா கூறியதாவது: மக்களவை தேர்தலில் தமிழகத்தில் இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் தொகுக்கப்பட்டு தலைமையிடம் ஒப்படைக்கப்படும்.

பாஜகவிற்கு ஓட்டு போட்டால் செல்லாத ஓட்டுக்கு சமம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார். செல்லாத ஓட்டாக இருந்த பாஜக தான் கடந்த 2014 தேர்தலில் 3-வது அணி அமைத்து 20 சதவீத வாக்குகளை பெற்றது. எனவே, யார் செல்லாத ஓட்டுஎன்பது தேர்தலுக்கு பிறகு தெரிய வரும். கோவை மக்களவை தொகுதியில் கமல் போட்டியிட்டால், அவரை பாஜக வேட்பாளர் மீண்டும் தோற்கடிப்பார், என்றார்.

SCROLL FOR NEXT