பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் செங்கதிர் செல்வன். இவர் கடந்த சில தினங்களாக மருத்துவ விடுப்பில் உள்ளார்.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், செங்கதிர் செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சீருடைப் பணியாளர் நடத்தை விதிகளை மீறியதால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செங்கதிர் செல்வனை நேற்று பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. ஷ்யாம்ளா தேவி உத்தரவிட்டார்.