தமிழகம்

கோவை - சென்னை "வந்தே பாரத்" வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு

செய்திப்பிரிவு

கோவை: சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை - சென்னை இடையேயான ‘வந்தே பாரத்’ வாராந்திர ரயில் சேவை செவ்வாய்க் கிழமை தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இருமார்க்கத்திலும் வரும் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ( செவ்வாய்க் கிழமை ) இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எண் 06035 சென்னை - கோவை வந்தே பாரத் ரயில், சென்னையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.15 மணிக்கு கோவை வந்தடையும். எண் 06036 கோவை - சென்னை வந்தே பாரத் ரயில், கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.50 மணிக்கு சென்னைக்கு சென்றடையும். வழியில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடியில் ரயில் நின்று செல்லும்.

SCROLL FOR NEXT