சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை வரவேற்பதாக அதிமுக எம்.பி.யும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று (சனிக்கிழமை) டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. ஜி.எஸ்.டி.யால் தமிழகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழக திட்டங்களுக்கும் மத்திய அரசின் நிதி வரவில்லை.
நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தலாம். செலவு குறையும் என்பதால் இதை நான் வரவேற்கிறேன். ஒரே இந்தியா என்ற கருத்தியலை அதிமுக எதிர்க்கிறது.
தமிழகத்தில் ஆட்சியையும் அ.தி.மு.க.வையும் காப்பாற்றுவோம். முன்னாள் முதலவர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களைத்தான் காலம் கடந்து மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது" என்றார்.