தமிழகம்

இண்டியா கூட்டணியில் அதிமுக? - வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்

செய்திப்பிரிவு

சேலத்தில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகைச்செல்வன் நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் வைகைச் செல்வன் கூறியதாவது: அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கசப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கான மருந்து அதிமுகவுடன் இருப்பதாக காங்கிரஸ் நம்பினால் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். இண்டியா கூட்டணியில் அதிமுக இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து இரண்டு நாட்களுக்குள் பதில் கிடைக்கும்.

தமாகா, பாஜகவுடன் உறவில் தான் இருந்தார்கள். தற்போது பாஜகவுடன் தமாகா இணைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து, தமாகா பிரிந்ததால் தாக்கம் ஏதும் இருக்காது.

மக்களவைத் தேர்தலுக்காக மிகப்பெரிய வியூகங்களை அமைப்பதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ் தரப்புக்கு, கடைசி வாய்ப்பாக பாஜகவுடன் இணைவதற்கு மட்டும் தான் வாய்ப்பு உள்ளது. ஆனால், அங்கும் சில சிக்கல்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளன, என்றார்.

SCROLL FOR NEXT