மதுரை: டெல்லியில் போராட்டத்தின் போது விவசாயிகள் உயிரிழந் ததைக் கண்டிப்பதாகக் கூறி, மதுரைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டிருந்த விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், சோழவந்தான் பகுதியில் நேற்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில கவுரவத் தலைவர் எம்.பி. ராமன், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆதி மூலம் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, செக்கானூரணி பகுதியிலும் விவசாயிகள் சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர்.