தமிழகம்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெ., கார் ஓட்டுநர் ஐயப்பன் ஆஜர்

செய்திப்பிரிவு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஜெயலலிதாவுக்கு 12 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக இருந்த ஐயப்பன் ஆஜராகினார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, நீதிபதி அ.ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் மனுக்களாகவும், பிரமாண பத்திரங்களாகவும் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் பலரிடமும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

அந்த வரிசையில் இன்று ஜெயலலிதாவிடம் 12 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக இருந்த ஐயப்பன் ஆஜராகியுள்ளார்.

SCROLL FOR NEXT