ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நன்றி தெரிவித்து டி-சர்ட் அணிந்து பேஸ் புக்கில் படம் வெளியிட்டதாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட னர்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண் டியில் இளைஞர்கள் சிலர், இராக் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப் புக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங் கள் அச்சடிக்கப்பட்ட டி-சர்ட்டுகள் அணிந்த நிலையில் உள்ள புகைப் படங்களை ஜூலை 29-ம் தேதி பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் போலீஸார் தொண்டியில் கடந்த 3 நாட்களாக ரகசிய விசாரணை மேற்கொண்டனர். விசாரணை யில், கடந்த மாதம் இந்தியாவைச் சேர்ந்த 46 செவிலியர்களை சிறை பிடித்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர், செவிலியர்களை கண்ணியமாக நடத்தி, சிறிய காயமும் இன்றி இந்தியாவுக்குப் பாதுகாப்பாக திருப்பி அனுப்பினர்.
எனவே, அந்த அமைப் புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் அந்த டி-சர்ட்டை அணிந்ததாக அந்த இளைஞர்கள் கூறினராம். இதுதொடர்பாக தொண்டியைச் சேர்ந்த அப்துல்ரகுமான் (20), முகம்மது ரிலுவான் (22) ஆகிய இருவர் மீது காவல் துறையினர் சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். பின்னர், திருவாடானை மாஜிஸ்திரேட் இளவரசி வீட்டில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப் பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.