தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.50 கோடி தங்கம் பறிமுதல்: உடந்தையாக இருந்த அதிகாரி கைது

செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.50 கோடி தங்கத்தை கடத்தி வந்த பயணி மற்றும் உடந்தை யாக இருந்த அதிகாரியை கைது செய்து சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழும்பில் இருந்து சென்னை வரும் விமானத்தில் பயணி ஒருவர், 5 கிலோ தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கொழும்பு விமானம் வந்ததும், சந்தேகப்படும்படியாக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இதயதுல்லா என்பவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தங்கம் கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டார். மேலும் தங்கத்தை கடத்தி வர விமான நிலைய குடியுரிமை அதிகாரி அன்பழகன் உடந்தையாக இருந்ததா கவும், தற்போது கடத்தல் தங்கம் அவர் வசம்தான் இருக்கிறது என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். தங்கம் இருந்த சூட்கேசை அன்பழகன் கழிப்பறையில் வைத்திருந்து, சிறிது நேரம் கழித்து எடுத்து வந்தார். சூட்கேசை திறந்து பார்த்தபோது, அதில் 5 கிலோ கடத்தல் தங்கம் இருந்தது. இதை யடுத்து இதயதுல்லா, அன்பழகன் ஆகியோரை கைது செய்தனர். இதே விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த பிரேமாவிடம் இருந்து ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

SCROLL FOR NEXT