எடப்பாடி பழனிசாமி | சரத்குமார் : கோப்புப் படங்கள் 
தமிழகம்

அதிமுகவுடன் கூட்டணி பேச்சு: சரத்குமார் தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி விமான நிலையத்தில் நேற்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

கும்பகோணத்தில் இன்று நடைபெறும் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி, எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பது விரைவில் தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT