மதிமுக சார்பில் அவைத்தலைவர் அர்ஜூன ராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்றைய தினம் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் தற்போதைக்கு ஒரு மக்களவைத் தொகுதியும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து பிறகு ஆலோசிக்கலாம் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜூனராஜ் கூறும்போது, பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமாக இருந்தது. தொடர்ந்து பேசுவோம் என்றார்.