படம்: நா.தங்கரத்தினம் 
தமிழகம்

“கார்ப்பரேட் நிறுவனங்களே பாஜகவின் பயனாளிகள்” பிரகாஷ் காரத் விமர்சனம் @ திண்டுக்கல்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: பாஜக கடைப்பிடிக்கும் கொள்கையால் மிகப்பெரிய பயனாளிகளாக கார்ப்பரேட் நிறுவனங்களே உள்ளன, என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் விமர்சித்தார்.

மக்களவைத் தேர்தலை முன் னிட்டு திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ‘அரசியல் சித்தாந்த சவால்களும், கடமைகளும்’ என்ற தலைப்பில் மாநிலப் பயிற்சிப் பட்டறை நேற்று நடந்தது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் வரவேற்றார். மாநிலச் செயலாளர் பாலகி ருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமை யின் கீழ் பாஜக நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த10 ஆண்டுகளில் ஏராளமான பிரச்சினைகளை, கஷ்டங்களை நாட்டு மக்கள் அனுபவித்து வரு கிறார்கள். நாட்டின் பல்வேறு உரிமைகள் மீது கடுமையான தாக்குதலை மோடி அரசாங்கம் தொடுத்து வருகிறது. மாநில உரிமைகள் நசுக்கப் படுகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பயங்கரமாக ஒடுக்கப்படுகிறார்கள். தேசத்தின் அடையாளமாக ராமர் கோயிலை முன்வைக்கிறார்கள்.

ராமர் கோயிலை பாஜகவின் வாக்கு வங்கியாகக் கருதிக் கொண்டிருக் கிறார்கள். பாஜக கடைப்பிடிக்கும் கொள்கையால் மிகப் பெரிய பயனாளிகளாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் உள்ளன. இதன் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அதீதமாக வளர்ந்துகொண்டே போகின்றன. இந்தத் தாராளமயக் கொள்கைகள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுகிறதே தவிர, சாதாரண ஏழை மக்களுக்கு பெரும் நாசத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை தோற்கடிக்க தமிழக மக்கள் முன்வர வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து, மாலையில் திண்டுக்கல் மெங்கில்ஸ் சாலை யில் தேர்தல் பரப்புரை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

SCROLL FOR NEXT