கோவை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கோவையில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார் காட்டூர் எஸ்.தனசேகரன். கோவை ராம்நகரில் வசித்துவருபவர் தொழிலதிபர் காட்டூர் எஸ்.தனசேகரன்.
இவர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது திருப்பூரில் கார்மென்ட்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக கோவை ராம்நகரில் வசித்து வருகிறார். கடந்த 18 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வரும் இவருக்கு, தற்போது ஓபிசி பிரிவில் மாவட்ட தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
2009 முதல் 2023 வரை காங்கிரஸில் ஆர்சிசிடியுவின் தலைவராக பொறுப்பேற்று பல்வேறு தொழிலாளர் பிரச்சினைகளுக்காக, கட்சி சார்பான மறியல், போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றிருக்கிறார். கோவை காட்டூர், ராம்நகர் உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் ஏழை மற்றும் குடிசை வாழ் மக்கள் சுமார் 1,500 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் பெற்றுத் தந்துள்ளார்.
படிக்க வசதியற்ற மாணவ, மாணவிகள் 90 பேருக்கு தனது சொந்த செலவில் கல்விக்கட்டணம், சீருடைகள், புத்தகங்கள் வழங்கியுள்ளார். விதவைகள், மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் 2 ஆயிரம் பேருக்கு வங்கிகள் மூலம் சுயதொழில் தொடங்க கடனுதவி பெற்றுத் தந்துள்ளார்.
நீண்ட காலமாக சிங்காநல்லூர் ரயில் நிறுத்தப் பிரச்சினைக்கு போராடி வரும் காட்டூர் எஸ்.தனசேகரன், எதிர்வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டால் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.