ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப் பில் பூங்காவுக்கு இடம் ஒதுக்காத தால், கணக்கு காட்டுவதற்காக பள்ளிக் கட்டிடத்தை இடித்து விட்டு பூங்கா அமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ள தாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சிக்குட்பட்ட ஏரியில் கடந்த 1993-ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டன. 115 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த ஏரியில், ஆறு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு, 3,700 மனைகள் உருவாக்கப்பட்டன. தற்போது, இந்தக் குடியிருப்பில் ஆறாயிரம் வீடுகள் உள்ளன. 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்குடியிருப்பில் மேல்நிலைத் தொட்டி, சமூக நலக் கூடம், வணிக வளாகம், மருத்துவமனைக்கான கட்டடங்கள் கட்டப்பட்டன. நூல கம், தபால் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன ஆனால், பூங்காவுக்கும், விளை யாட்டுத் திடலுக்கும் இடங்கள் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், பள்ளிக் கட்டிடத்தை இடித்து பூங்கா அமைக்கும் பணி யில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள் ளதாகக் கூறப்படுகிறது. ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் இப்பூங்கா அமைப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் தரணிதரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தன்னிறைவு வீட்டுமனைத் திட்டத் தின் கீழ், இங்கிருந்த மிகப் பெரிய ஏரியை தூர்த்து குடியிருப்பாக மாற்றியது. மொத்தமுள்ள 115 ஏக்கரில், 15 ஏக்கர் பொது பயன் பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது.
அந்த இடத்தில் மருத்துவ மனை, தீயணைப்பு நிலையம், பள்ளிக் கூடம், பேருந்து நிலையம், தபால் நிலையம் உள்ளிட்ட வற்றுக்காக இடங்கள் ஒதுக்கப் பட்டன. ஆனால், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடலுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இது குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி யதற்கு முறையான பதில் இல்லை.
இந்நிலையில், இவ்விவரம் குறித்து ‘தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியானது. இதை யடுத்து, பூங்காவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கணக்கு காட்டுவதற்காக, இக்குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட பள்ளிக் கூடத்தை இடித்து விட்டு, பூங்கா கட்டும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு தரணிதரன் கூறினார்.
இதுகுறித்து, ஆவடி நக ராட்சி ஆணையர் சிவசுப்பிரமணி யத்திடம் கேட்ட போது, ‘‘பள்ளிக் கட்டிடம் பழுதடைந்ததால் அதை இடிக்க முடிவு செய்யப் பட்டு அதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அந்த இடத்தில் பூங்கா அமைப் பதற்கான திட்டம் இல்லை. எனினும், இதுதொடர்பாக நகர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினால், அது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்றார்.