சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு மரியாதை செய்ய உள்ளார். இதையொட்டி, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் ஆங்காங்கே கட்சி கொடிகம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், நலதிட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.