தமிழகம்

திமுக கூட்டணியில் சிட்டிங் தொகுதிகளையே கேட்கும் சிபிஎம்

செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி மதுரை, கோவை தொகுதியை இம்முறையும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கடந்த முறை பெற்ற மதுரை, கோவை தொகுதிகளுடன், கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

அதே நேரம் மதுரை தொகுதியில் இம்முறை திமுக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், தமிழக முதல்வரின் நேரடி தொடர்பிலும், மக்களவையில் பல்வேறு பிரச்சினைகளை விவாதத்துக்கு கொண்டு
வந்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் எம்.பி.க்கே மீண்டும் மதுரை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது உறுதி என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

SCROLL FOR NEXT