கோப்புப் படம்

 
தமிழகம்

மழையில் முளைத்த காளான்களை சமைத்து சாப்பிட்ட வடமாநில தொழிலாளர்கள் 12 பேர் பாதிப்பு

செய்திப்பிரிவு

பொன்னேரி: மழை காரண​மாக ஆங்​காங்கே முளைத்​திருந்த காளான்​களை சமைத்து சாப்​பிட்ட வட​மாநில தொழிலா​ளர்​கள் 12 பேருக்கு வாந்தி, மயக்​கம் ஏற்​பட்​டது.

திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் பல்​வேறு பகுதி​களில் தற்​போது நெல் நட​வுப் பணிகள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

பொன்​னேரி, மீஞ்​சூர் மற்​றும் அதைச் சுற்​றியுள்ள கிராமங்​களில் ஆந்​திரா மற்​றும் வட​மாநிலங்​களைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலா​ளர்​கள் ஏராளமானோர் தங்கி, நட​வுப் பணிகளில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

அந்த வகை​யில், பொன்​னேரி அருகே உள்ள பெரிய கரும்​பூர் கிராமத்​தில் தங்​கி​யுள்ள மேற்​கு​வங்க மாநிலத்​தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலா​ளர்​கள் கடந்த 21-ம் தேதி அப்​பகுதி​யில் உள்ள விவசாயி ஒரு​வரது நிலத்​தில் நாற்று நடவு செய்​யும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

அவர்​கள் பணி முடிந்து தங்​குமிடம் திரும்​பும்​போது, மழையின் காரண​மாக வயல்​வெளி​யில் ஆங்​காங்கே முளைத்​திருந்த காளான்​களை பறித்​துச் சென்று, சமைத்து சாப்​பிட்​டுள்​ளனர்.

காளான் உணவு சாப்​பிட்ட 6 பெண்​கள் உட்​பட 12 பேருக்கு சிறிது நேரத்​தில் வாந்தி, மயக்​கம் ஏற்​பட்​டது. அதிர்ச்​சி​யடைந்த சக தொழிலா​ளர்​கள் கிராம மக்​களின் உதவியுடன் பாதிக்​கப்​பட்​ட​வர்​களை மீட்டு பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

அங்கு அவர்​கள் அனுமதிக்​கப்​பட்டு சிகிச்சை அளிக்​கப்​பட்டு, நேற்று முன்​தினம் இரவு தங்​குமிடம் திரும்​பினர். இது​குறித்து, கும்​மி​டிப்​பூண்டி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT