மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா தொடர்பாக தூத்துக்குடியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில் ராஜ். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை: பிப். 25-ல் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் மின்சாரகார் தொழிற்சாலைக்கு முதல்வர்ஸ்டாலின் வரும் 25-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னையில் கடந்த மாதம்உலக முதலீட்டாளர்கள் மாநாடுநடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் இரு நிறுவனங்கள், ரூ.26 ஆயிரம் கோடிமுதலீடு செய்ய தமிழக அரசுடன்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

நிறுவனம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதற்காக, தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.

அன்று காலை தூத்துக்குடி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறார்.

இந்நிலையில், சிப்காட் இயக்குநர் செந்தில் ராஜ், தொழில் வழிகாட்டும் அமைப்பு தலைமைநிர்வாக அதிகாரி விஷ்ணு ஆகியோர் தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலை அமையவுள்ள இடத்தை நேற்று ஆய்வு செய்தனர்.

SCROLL FOR NEXT