தமிழகம்

டிடிவி அணிதான் தூங்குகிறது; நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

செய்திப்பிரிவு

"அதிமுகவில் எல்லோரும் விழிப்புடன்தான் இருக்கிறோம். டிடிவி தினகரன் அணிதான் தூங்குகிக் கொண்டிருக்கிறது" என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

"எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் மட்டுமே ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள்" என கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆதரவு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறிய நிலையில் அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுகவில் எல்லோரும் விழிப்புடன்தான் இருக்கிறோம். டிடிவி தினகரன் அணிதான் தூங்குகிக் கொண்டிருக்கிறது. அதிமுக அருதி பெரும்பாண்மையுடன் இருக்கிறது. அதிமுக மாபெரும் இயக்கம். அம்மா சொன்னதுபோல் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் தழைத்து நிற்கும்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கொள்கை மீதும் தலைமை மீதும் காட்டக்கூடாது. அத்தகைய விருப்பு வெறுப்புகள் பேசித் தீர்க்கக் கூடியவையே. எனவே, அதிமுகவில் இருந்து வேறு யாரும் தினகரன் பக்கம் செல்ல மாட்டார்கள்" என்றார்.

SCROLL FOR NEXT