விழுப்புரத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர். 
தமிழகம்

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்: விழுப்புரம் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: இந்தியாவில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தி விழுப்புரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்டத் தலைவர் சல்மான் பார்ஸி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் அப்துல்ஹை, துணைத் தலைவர் அன்சாரி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் யாசீர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயலாளர் அப்துல் லத்தீப், மாவட்ட துணைத் தலைவர் முகமது இலி யாஸ், துணை செயலாளர் பாரீஸ், மாவட்ட பேச்சாளர் இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

1991-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம், இந்திய நாடு சுதந்திரம் பெறும் போது எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அவை அப்படியே தொடர உத்தரவாதம் அளித்தது.ஆனால் அதற்கு மாறான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஜனநாயகமும், சட்ட நெறிமுறைகளும் குழி தோண்டி புதைக்கப்படும் இந்த காலத்தில் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT