கமல் மரபணு மாற்றப்பட்ட விதை; தமிழகத்தில் நாம் அதை விதைப்பதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
காகிதப் பூக்கள் மலரலாம் ஆனால் மணக்காது என ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சூசகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "அரசியல் பிரவேசம் செய்யும் கமல், ரஜினி போன்றோர் காதிதப்பூக்கள் என்று ஸ்டாலின் கூறிய கருத்துக்கு நான் உடன்படுகிறேன். கமல் தான் காகிதப்பூவல்ல ,விதை என்ற கூறியிருக்கிறார். ஆனால், கமல் மரபணு மாற்றப்பட்ட விதை அது யாருக்கும் பயன்தராது. தமிழகத்தில் நாம் அதை விதைப்பதில்லை.பள்ளியில் இருந்து அரசியலை தொடங்கக் கூடாது. மக்களை சந்தித்துதான் தொடங்க வேண்டும். பள்ளி என்பது அரசியல் தொடங்குவதற்கான இடம் இல்லை" என்றார்.