தமிழகம்

“அதிமுகவிடம் ஒரு சீட் கேட்போம்” - ‘புரட்சி பாரதம்’ ஜெகன்மூர்த்தி

செய்திப்பிரிவு

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புவதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். 2021 பேரவை தேர்தலில் கே.வி.குப்பம் தொகுதியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, "மக்களவை தேர்தலில் கட்சி சார்பில் ஒரு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருக்கிறோம். அதிமுக கூட்டணியில் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை வழங்குமாறு கேட்க இருக்கிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT