சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரான முன்னாள் எம்எல்ஏ முருகானந்தம், ‘‘டெல்லி மேலிடத்திடம், ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரியில் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளேன். எனவே, நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இந்த தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது’’ என்றார். பல ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.