தமிழகம்

‘ஒரு தொகுதியாவது கொடுங்க’ - எம்.எச்.ஜவாஹிருல்லா

செய்திப்பிரிவு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதற்கு தலைைம தாங்கிய அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. எனவே, காந்தியடிகள் கனவு கண்ட இந்தியாவை மீண்டும் அமைக்க பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வரும் மக்களவை தேர்தலில் தோற்கடிக்கப்படுவதற்கு அனைத்து வகையிலும், அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக பாடுபடுவது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியை கட்டாயம் திமுக எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் பொதுக்குழு தீர்மானித்திருக்கிறது. இதுதொடர்பாக திமுகவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எங்கு போட்டியிட்டாலும், அதில் வெற்றி வாய்ப்பு உள்ளது.

SCROLL FOR NEXT