தமிழகம்

உதகை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தினகரன் இரங்கல்

செய்திப்பிரிவு

சென்னை: உதகை அருகே நிகழ்ந்த கட்டுமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உதகை அருகே கட்டுமான பணியின்போது தடுப்புச் சுவர் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அதே விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கட்டுமான தொழிலாளர்கள் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்" என்று தினகரன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT