தமிழகம்

அண்ணாமலை இன்று டெல்லி பயணம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் `என் மண், என்மக்கள்' யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரக்கோணத்தில் நேற்று நடைபயணத்தில்ஈடுபட்டார். ஏற்ெகனவே திட்டமிட்டபடி, ஓய்வெடுப்பதற்காக நடைபயணம் இன்று ஒருநாள்ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு தேசிய தலைவர்களை சந்தித்து, தேமுதிக, பாமகவுடன் நீடிக்கும்கூட்டணி இழுபறி, அதிமுகவைகூட்டணியில் இணைப்பதற்கான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், தமிழகத்தில்பாஜக சார்பில் போட்டியிட தேர்வு செய்துள்ளோரின் பட்டியலைதலைமையிடம் கொடுத்து, ஆலோசனை பெறவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT