தமிழகம்

ரசிகர் மன்றங்களை இப்படியும் உருமாற்ற முடியும்: அரும்பாக்கம் இளைஞர்களின் கல்விச் சேவை

குள.சண்முகசுந்தரம்

நடிகர்களுக்கு கட் அவுட் வைப்பது, புதுப்படம் ரிலீஸானால் பாலாபிஷேகம் செய்வது... இப்படியான சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் அற்புத மான சேவையை செய்துகொண் டிருக்கிறார்கள் மக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை நண்பர்கள்.

சென்னை அரும்பாக்கம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்த 40 பேர் சேர்ந்து 1989-ல் பத்மஸ்ரீ கமல்ஹாசன் நற்பணி இயக் கத்தைத் தொடங்கினார்கள். எல்லா ரசிகர்களையும் போலத் தான் இவர்களும் மன்றம் தொடங் கினார்கள். ஆனால், இவர்கள் பயணித்த பாதை வித்தியாச மானது. மன்றம் தொடங்கிய போது, தங்களாலான நிதி திரட்டி 5,000 ரூபாய்க்கு, தாங்கள் படித்த மாநகராட்சி பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார்கள்.

அது அந்த பகுதி மக்களிடமும் ஆசிரியர்களிடமும் அவர்களை ஹீரோக்களாக உயர்த்திக் காட்டியது. அடுத்தடுத்த வருட சுதந்திர தினத்தில் லட்ச ரூபாய் அளவுக்கு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி னார்கள். சினிமா கலப்பில்லாமல் இன்னும் செம்மையாக சேவை செய்ய நினைத்த இந்த இளைஞர் கள், கமல்ஹாசன் பெயரில் இருந்த நற்பணி மன்றத்தை 2000-ல் மக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளையாக மாற்றினார்கள். அதன்பிறகு நடந்தவைகளை அறக்கட்டளையின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி விவரிக்கிறார்.

‘‘தொடக்கத்தில் கல்விச் சேவை மட்டுமே செய்துகொண்டிருந்த நாங்கள், காலப்போக்கில், இயலாதவர்களுக்கும் தேவை யான உதவிகளை செய்ய ஆரம்பித்தோம். இப்போது ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் அளவுக்கு எங்களின் சேவை விரிந்திருக்கிறது. குற்றச் செயல் களில் ஈடுபட்டு சிறையில் இருப் பவர்களின் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்காகவும் ஏழைக் குழந்தைகளை கல்வியில் மேம்படுத்துவதற்காகவும் 2003-ல் தமிழக முதல்வர் சென்னையில் ‘போலீஸ் பாய்ஸ் கிளப்’களை ஆரம்பிச்சாங்க. அரும்பாக்கம் பகுதிக்கான கிளப்பை எங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண் டோம்.

இப்போது அந்த பாய்ஸ் கிளப்பின் பயிற்சி வகுப்பில் 240 மாணவர்கள் படிக்கிறார் கள். அங்கு படித்து நல்ல நிலைக்கு உயர்ந்திருக்கும் மாணவர்களே அவர்களுக்கு பாடம் எடுக்கிறார் கள். நமது பகுதியில் இருக் கும் பள்ளிகளையும், அந்தப் பள்ளி மாணவர்களையும் தரம் உயர்த்திக் காட்டுவோம் என்பது தான் எங்களது நோக்கம். இந்தத் திட்டத்துடன் எம்.எம்.டி.ஏ. காலனி யில் உள்ள மாநகராட்சி பள்ளி யின் சத்துணவுக்கூடத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் செலவில் எரிவாயு இணைப்பு கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். அரும் பாக்கம் மாநகராட்சிப் பள்ளி கள் இரண்டுக்கும் எல்.சி.டி. புரஜெக்டர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தோம்.

இந்த ஆண்டு, அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வளர்ச்சிக் காக ரூ.75 ஆயிரம் நிதி திரட்டிக் கொடுத்தோம். மக்களுக்குச் சேவை செய்யும் எண்ணம் கொண்ட அரசு ஊழியர்களை, மக்கள் மூலமே அடையாளம் கண்டு, அவர்களை சுதந்திர தினத்தில் கவுரவிக்க முடிவெடுத் தோம். அப்படி இந்த ஆண்டு 12 பேரை தேர்வு செய்து, ‘உழைப்பால் உயர்ந்தவர்’ விருது கொடுக்கிறோம்.

வருங்கால சந்ததியினர்களான மாணவர்களை நல்வழிப்படுத்தி னால் சமுதாயம் நல்வழிப்படும்’’ என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

SCROLL FOR NEXT