மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.கார்த்திகாவிடம் நிலத்தை தானமாக வழங்கும் ஆயி என்ற பூரணம்மாள் 
தமிழகம்

மதுரையில் அரசுப் பள்ளிக்கு மேலும் 91 சென்ட் நிலம் வழங்கிய வங்கி ஊழியர்!

சுப. ஜனநாயகசெல்வம்

மதுரை: மதுரை வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம் அம்மாள் தன் மகள் ஜனனியின் நினைவாக இன்று மீண்டும் 91 சென்ட் நிலத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகாவிடம் தானமாக வழங்கினார்.

மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த கனரா வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம் அம்மாள், யா.கொடிக்குளத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1.52 ஏக்கர் நிலத்தை ஏற்கெனவே வழங்கினார். வங்கி ஊழியரின் ஈகைச் செயலை பாராட்டி தமிழக முதல்வர் குடியரசு தினத்தன்று முதலமைச்சர் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். அதேபோல், மதுரையில் நடந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இன்று பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் வகையில் கூடுதலாக 91 சென்ட் நிலத்தை தானமான இன்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.கார்த்திகாவிடம் இன்று அலுவலகத்தில் வழங்கினார். இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும்.

SCROLL FOR NEXT