நடிகர் கமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தலைப்புச் செய்திகளாக இருக்கலாம், ஆனால் அவர் ஒருபோதும் தலைவராக முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கியுள்ளார். இன்று மாலை அவர் தனது கட்சிப் பெயர், கட்சியின் கொடி, கொள்கை ஆகியவற்றை வெளியிடவிருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "நடிகர் கமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தலைப்புச் செய்திகளாக இருக்கலாம், ஆனால் அவர் ஒருபோதும் தலைவராக முடியாது. ரைப்பட போட்டியை போல் கமல் அரசியல் கட்சி தொடங்குகிறார்" எனக் கூறியிருக்கிறார்.