தமிழகம்

எளிமையில் இருந்துதான் உயர்வு பிறக்கும்: கமல் ட்வீட்

செய்திப்பிரிவு

நடிகர் கமல்ஹாசன் ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அங்கு அப்துல் கலாமின் சகோதரர், அவரது மனைவி, அவர்கள் மகன் சலீம் ஆகியோரை சந்தித்தார். அங்கு காலை உணவையும் சாப்பிட்டார்.

தனது அரசியல் பயணத்தை கலாம் வீட்டிலிருந்து தொடங்கியது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன். எனக் குறிப்பிட்டார்.

மற்றுமொரு ட்வீட்டில் "பெரிய விஷயங்கள் எளிமையாக தொடங்குகின்றன. எளிமையில் இருந்துதான் உயர்வு பிறக்கும். எனது பயணத்தை ஒரு மாமனிதரின் எளிமையான இல்லத்திலிருந்து தொடங்கியதில் பெருமகிழ்ச்சி" என கமல் கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT