பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

தமிழக மின்வாரியத்துக்கு சிஐடியு, ஏஐடியுசி ஸ்டிரைக் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் வகையில் தமிழக மின் வாரியத்திடம் சிஐடியு, ஏஐடியுசி, தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் உள்ளிட்ட சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளன.

மத்திய அரசைக் கண்டித்து பிப்.16-ம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை நடத்த அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதையொட்டி, தமிழக மின் வாரியத்துக்கு சிஐடியு, ஏஐடியுசி, தமிழ்நாடு எலக்ட்ரி சிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் உள்ளிட்ட சங்கங்கள் வழங்கிய ஸ்டிரைக் நோட்டீஸில், ‘காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, அண்மையில் நடைபெற்ற மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில், ‘மின் வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை முன்வைத்து பிப்.13-ம் தேதி அனைத்து வட்ட மேற்பார்வை அலுவலகங்கள் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, மின் வாரிய தலைவரிடம் கோரிக்கை கடிதம் அளித்து பேசுவது’ என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT