தமிழகம்

அண்ணா நினைவு நாள் இன்று: மரியாதை செலுத்த புதிய ஏற்பாடு

செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால், அண்ணா, எம்ஜிஆர் நினைவிடம் இடையில் உள்ள பகுதியில்அண்ணாவின் நினைவு தினமான இன்று அவருக்கு மரியாதை செலுத்துவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது

அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இன்று (பிப்.3) நடைபெறவுள்ள அண்ணாவின் 55-வது நினைவு நாளைமுன்னிட்டு, அண்ணா மற்றும் எம்ஜிஆரின் நினைவிடத்துக்கு இடையில் அமைந்துள்ளபகுதியில் அண்ணாவின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில், அண்ணாவுக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தும்படி அரசியல் கட்சிகள், அரசியல்தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT