ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பன் பாக் நீரிணை கடலில் புதிய ரயில்வே பாலத்தின் மத்தியில் தூக்குப் பாலத்துக்காக தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
நேற்று இந்த தூண் அமைக்கும் பணிக்காக 32 டன் எடையுள்ள கோபுரப் பகுதியை கிரேன் மூலம் தூக்க முற்பட்ட போது இயந்திரக் கோளாறு காரணமாக கிரேன் முறிந்து விழுந்ததில் பணியிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளிகளான மாரியப்பன், கிறிஸ்டி ஆகிய இருவர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பாம்பன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.