காஞ்சிபுரத்தில், நகர்புற ஊரமைப்பு துறையின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக தனியார் பொறியியல் கல்லூரியின் அலுவலக கட்டிடத்தை உள்ளூர் திட்டக்குழுமத்தினர் திங்கள்கிழமை மூடி சீல் வைத்தனர்.
காஞ்சிபுரம் நகரப் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட் டுள்ள வணிகம் மற்றும் கல்வி நிறுவனங்களின் கட்டிடங்கள் நகர்ப்புற ஊரமைப்புத்துறையின் அனுமதி பெற்று, உரிய பாதுகாப்பு அம்சங் களுடன் கட்டப்பட்டுள்ளதா என, காஞ்சிபுரம் உள்ளூர் திட்டகுழுமத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர் களிடம், ஆவணங்களை சமர்பிக்குமாறு நோட் டீஸ் அளிக்கப்பட்டது. இந்நிலையில், காஞ்சி புரம் அடுத்த வெள்ளகேட் அருகே செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியின் கட்டிடங்கள் அனைத்தும் நகர்ப்புற ஊரமைப்புத் துறையின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, உள்ளூர் திட்டக் குழுமத்துறையினர் திங்கள்கிழமை அதிகாலை முதற்கட்டமாக கல்லூரியின் அலுவலகம் செயல்படும் கட்டிங்களின் அறைகளை மூடி சீல் வைத்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் உள்ளூர் திட்டகுழு மத்துறை உறுப்பினர் மற்றும் செயலர் (பொறுப்பு) ஞானமணி கூறியதாவது: ‘காஞ்சி புரம் பகுதிகளில் நகர்புற ஊரமைப்புதுறை யினரின் அனுமதியோடு கட்டிடங்கள் அமைக் கப்பட்டுள்ளதா என சோதனை மேற்கொண் டதில், ஏராளமான கல்வி நிறுவனங்களின் கட்டிடங்கள் முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
மேலும், நகர்ப்புற ஊரமைப்புத்துறையிடம் சமர்பித்துள்ள கட்டிட வரைபட ஆவணங்களில் உள்ளதுபோல் கட்டிடங்களை அமைக்காமல், வேறு மாதிரியாகவும் இவர்கள் அமைத்துள்ளனர். அதனால், கட்டிடங்களில் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு தொடர்ந்து நோட்டீஸ் அளிக்கப்பட்டது. எனினும், அவர்கள் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் மற்றும் ஆவணங்களை சமர்பிக்கவில்லை.
அதனால் இவ்வாறான கட்டிடங்களுக்கு சீல் வைக்குமாறு அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதில், திங்கள்கிழமை சீல் வைக்கப் பட்ட தனியார் பொறியியல் கல்லூரியில் 29,722 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களில், நகர்ப்புற ஊரமைப்புதுறையிடம் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களில் உள்ளது போல் இல்லாமல் மாற்றி கட்டப்பட்டுள்ளது. அதனால், இந்தக் கட்டிடத்துக்கு சீல் வைத் துள்ளோம். மேலும் 10 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் கட்டிடகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்’ என்றார்.