திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக பா.சத்யா போட்டியிடுகிறார்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட 10 சட்டப் பேரவை தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர். மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பா. சத்யா போட்டியிடுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சத்யா போட்டியிட்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் யாரும் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுபோல் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களை சேர்ந்தவர்கள் யாரும் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.