காரைக்குடி ஆலம்பட்டு-குருந்தம்பட்டு கிராமத்தில் நேற்று நடைபெற்ற ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு சீர்வரிசை பொருட்களுடன் வந்த இந்து சமுதாய பெண்கள். 
தமிழகம்

பள்ளிவாசல் திறப்பு விழா - சீர்வரிசையுடன் வந்த இந்துக்கள் @ காரைக்குடி

செய்திப்பிரிவு

காரைக்குடி: காரைக்குடி அருகே பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு இந்து சமூகத்தினர் சீர்வரிசையுடன் சென்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆலம்பட்டு- குருந்தம்பட்டு கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலை பழமை மாறாமல் புதுப்பித்தனர். இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா பள்ளிவாசலை திறந்துவைத்தார். குடியரசு தினவிழாவையொட்டி, பள்ளிவாசல் வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.

இந்த விழாவில், மத ஒற்றுமையைப் போற்றும் வகையில், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, கல்லல் பகுதிகளைச் சேர்ந்த இந்து சமூகத்தினர் பங்கேற்றனர். இந்து பெண்கள் தேங்காய், பழத்துடன் சீர்வரிசைப் பொருட்களை கொண்டு வந்தனர். அவர்களை முஸ்லிம்கள் வரவேற்றனர்.

SCROLL FOR NEXT