தமிழகம்

திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டத்தில் கொசு வலை போர்த்தி பங்கேற்ற கவுன்சிலர்

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருமுருகன் பூண்டி நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. நகர்மன்றத் தலைவர் குமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ஆண்டவன், துணைத் தலைவர் ராஜேஸ்வரி பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், 16-வது வார்டு அதிமுக நகராட்சி கவுன்சிலர் தங்கவேல், தனது உடலில் கொசு வலை போர்த்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது,16-வது வார்டில் கொசு உற்பத்தி அதிகமாகி நோய்த் தொற்று பரவி வருவதாக அவர் புகார் தெரிவித்தார். மேலும் ராக்கியாபாளையம் - உமைஞ்செட்டிபாளையம் சாலை ஜெகநாதன் நகர் பகுதியில் உள்ள சாக்கடையை தூர்வார வேண்டும்.

கொசு மருந்து அடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் குமார் உறுதி அளித்ததால், தங்க வேல் போராட்டத்தை கைவிட்டார்.

SCROLL FOR NEXT