தமிழகம்

அனுமதியின்றி எல்இடி திரையில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஒளிபரப்பிய பாஜகவினர் மீது வழக்கு @ கோவை

செய்திப்பிரிவு

கோவை: அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டதையொட்டி, கோவையில் பல்வேறு கோயில்களில் சிறப்பு யாக வேள்விகள், பூஜைகள் நடந்தன.

இதை கொண்டாடும் விதமாக, சரவணம்பட்டி, பீளமேடு, கவுண்டம்பாளையம், ரேஸ்கோர்ஸ், காட்டூர், வெரைட்டிஹால் சாலை, கடைவீதி ஆகிய காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக பாஜக, இந்து முன்னணி பிரமுகர்கள், பொதுமக்கள் என 16 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ராமர் கோயில் முன்பு, பாஜகவினர் சார்பில், காவல் துறையினரின் அனுமதியின்றி எல்.இ.டி திரை வைத்து, ராமர் கோயில் கும்பாபிஷேக காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அங்கு வந்த ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர், அனுமதியின்றி ஒளிபரப்ப தடை விதித்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாஜக தெப்பக்குளம் மண்டல தலைவர் சுரேஷ் பாபு, செய்திப் பிரிவு செயலாளர் கண்மணி பாபு, நாகராஜ், கோபி, செந்தில் குமார் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT