பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர்களை பயனாளிகள் சரிபார்க்கும் பணி இன்று சென்னையில் நடைபெற்றது.
தமிழகத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் பிப். 24-ல் அமல்படுத்தப்படுகிறது. நாளை மாலை 5 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக, பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்.
தற்போது அந்த வாகனங்கள் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இதற்கான சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. அவற்றின் புகைப்படத் தொகுப்பு..