அலுவல் மொழி ஊக்குவிப்பில் முதல் இடத்துக்கான விருதை, மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவிடம் இருந்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் (இடது) பெற்றுக் கொண்டார்.. 
தமிழகம்

அலுவல் மொழி ஊக்குவிப்பில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சிறப்பு விருது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், அலுவல் மொழி மேம்பாட்டில் தென்மண்டல அளவில் (சி - மண்டலம்) முதல் இடம் பிடித்து2022-23-ம் ஆண்டுக்கான விருதைபெற்றுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவிடம் இருந்து விருதை சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் பெற்றுக்கொண்டார்.

மூத்த மொழி பெயர்ப்பு அலுவலர் ஜோதி நடோனி, அமைச்சரிடமிருந்து சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், உள்துறை அமைச்சகத்தின் அலுவல்மொழி துறையிடம் இருந்து இத்தகைய சிறப்பு விருதை பெறுவது இதுவே முதல்முறையாகும்.

SCROLL FOR NEXT