தமிழகம்

மெரினா கடற்கரை கூட்ட நெரிசலில் தொலைந்த 26 குழந்தைகள் மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை: காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் நேற்று கூடியிருந்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் காவல் துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று சுமார் 5 ஆயிரம் குழந்தைகள் பெற்றோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தனர். காவல் உதவி மையங்களின் வாயிலாக குழந்தைகளின் கைகளில் அடையாள அட்டை அணிவிக்கப்பட்டு, கடற்கரைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையிலும், நேற்றைய கூட்ட நெரிசலில் 26 குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிந்து தொலைந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கை காரணமாக, காணாமல்போன குழந்தைகள் அனைவரும் விரைந்து மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT