மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி மாடுகளுக்கு வாழைப் பழம் கொடுத்த இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான். 
தமிழகம்

ஜல்லிக்கட்டு சர்வதேச கவனம் பெற்று வருகிறது: இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் கருத்து

செய்திப்பிரிவு

சிவகங்கை: ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட செந்தில் தொண்டமான், சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறார். இக்காளைகள் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளன.

இந்நிலையில் மாட்டுப் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று தனது தோட்டத்தில் அப்பகுதி மக்களுடன் இணைந்து பாரம்பரிய முறைபடி பொங்கல் வைத்து கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘இலங்கையில் ஜல்லிக்கட்டு நடத்திய பின்பு, அதுசர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இலங்கைக்குதமிழர்கள் சென்ற நேரத்தில் தங்களது உடைகள், கலாச்சாரங்களை மட்டுமே எடுத்துச் சென்றனர். தமிழர்களின் கலாச்சாரத்தை இலங்கை தமிழர்கள் அங்கு வளர்த்தும், பாதுகாத்தும் வருகின்றனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT