தமிழகம்

தமிழகத்தில் ஜன.18 வரை வறண்ட வானிலை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குசுழற்சி நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல்வரும் 18-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.

தென்மேற்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT