சென்னை: மாநகராட்சியில் 20 ஆண்டுகள் பணிபுரிந்த 113 ஓட்டுநர்களுக்கு தலா 4 கிராம் தங்கப்பதக்கங்களை மேயர் பிரியா வழங்கினார். சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு இயந்திரப் பொறியியல் துறையின் சார்பில் பாராட்டு விழா,ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்றுநடைபெற்றது.
பணிக்காலத்தின்போது வாகனத்தை விபத்தின்றி இயக்கிஇருத்தல், வாகனங்களை பராமரிக்கும் தன்மை, எரிபொருள்சேமிப்பு, நன்னடத்தை மற்றும்தொடர் பணி வருகை ஆகியவற்றின் அடிப்படையில் 113 ஓட்டுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் 113 பேருக்கும் ரூ.34.35 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு பரிசாக தலா 4 கிராம் தங்கப் பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் மேயர் பிரியா வழங்கினார்.
இந்நிகழ்வில் துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையர் ஷரண்யா அறி, நிலைக்குழு தலைவர் கோ.சாந்தகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.