தமிழகம்

அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் வேணுகோபால்: மைத்ரேயனின் பதவிகள் பறிப்பு

செய்திப்பிரிவு

அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக டாக்டர் பி.வேணு கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பில் இருந்து மைத் ரேயன் நீக்கப்பட்டு, அப்பதவிக்கு ஏ.நவநீதகிருஷ்ணன் நியமிக்கப் பட்டுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. மக்களவையில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து 3-வது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு நடந்த அதிமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக் குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். நாடாளுமன்றக் குழு மற்றும் மக்களவை அதிமுக தலை வராக மு.தம்பிதுரை தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை கட்சித் தலைவராக வா.மைத்ரேயன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடாளுமன்றக் குழுத் தலை வராக இருந்த தம்பிதுரை, அண்மையில் மக்களவை துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அதிமுக நாடாளுமன்றக் குழுக் களை மாற்றி அமைத்து கட்சி யின் பொதுச் செயலாளரும் முதல் வருமான ஜெயலலிதா அறிவித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது: அதி முக மக்களவை மற்றும் மாநிலங் களவைக் குழு நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் நியமிக் கப்படுகின்றனர்.

நாடாளுமன்ற குழுத் தலைவர் - டாக்டர் பி.வேணு கோபால், துணைத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன்.

மக்களவைக் குழுத் தலைவர் - டாக்டர் பி.வேணுகோபால், துணைத் தலைவர் - குமார், கொறடா - கே.என்.ராமச்சந்திரன், பொரு ளாளர் வனரோஜா, செயலாளர் - டாக்டர் கே.காமராஜ்.

மாநிலங்களவை குழுத் தலைவர் - ஏ.நவநீதிகிருஷ்ணன், துணைத் தலைவர் - எஸ்.முத்துக்கருப்பன், கொறடா - சசிகலா புஷ்பா, பொரு ளாளர் - டாக்டர் ஆர்.லட்சுமணன், செயலாளர் - டி.ரத்தினவேல்.

இவ்வாறு அறிக்கையில் முதல் வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மைத்ரேயனின் பதவிகள் பறிப்பு

ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘அதிமுக மருத்துவ அணித் தலைவர் பொறுப்பில் இருந்து டாக்டர் வா.மைத்ரேயன் எம்.பி. இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தம்பிதுரைக்கு பிறகு அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக மைத்ரேயன் பொறுப் பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து 3 பதவிகள் அதிரடியாக பறிக்கப் பட்டுள்ளன. நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர், மாநிலங் களவை குழுத் தலைவர் மற் றும் அதிமுக மருத்துவ அணித் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து மைத்ரேயன் நீக்கப் பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT