அங்கித் திவாரி 
தமிழகம்

அமலாக்கத் துறை அதிகாரியின் காவல் ஜன. 24 வரை நீட்டிப்பு

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: லஞ்சம் பெற்ற வழக்கில் கைதானஅமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது நீதிமன்றக் காவல்நேற்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து, அங்கித் திவாரிநேற்று காணொலிக் காட்சி வாயிலாக திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மோகனா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை வரும் 24-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றக் கிளையில் அங்கித் திவாரிக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில், 3-வது முறையாக இவரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அங்கித் திவாரியை துறை ரீதியாக விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு இன்று (ஜன. 12) விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT