வாணியம்பாடி: வாணியம்பாடியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுவன் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் (42). இவர் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கோபி நாத் ( 13 ). இவர் கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கோபி நாத்துக்கு கடந்த 2-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, கோபி நாத்தை வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு 3 நாட்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிறுவனின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பிறகு, அங்கிருந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்குச் சிறுவனுக்குக் காய்ச்சல் குறையாததால், ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், கோபிநாத் துக்கு டெங்குகாய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைப் பல னின்றி நேற்று அதிகாலை சிறுவன் உயிரிழந்தார்.
சுகாதாரப் பணிகள்..: சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வாணியம்பாடி சுகாதாரப் பணியாளர்கள் வளை யாம்பட்டு அண்ணா நகர்ப் பகுதிக்கு விரைந்து சென்று அப்பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுகாதாரப் பணி களில் ஈடுபட்டனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, ‘‘வளையாம்பட்டு அண்ணா நகர்ப் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மக்களுக்குத் தேவை யான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. கால்வாய் தூர்வாரப் படாததால் கொசு உற்பத்தியாகி, பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குப்பைக் கழிவுகள் தினசரி அகற்றப்படுவதில்லை. இதனால், பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது டெங்கு வால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது’’. என்றனர்.
இது குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில் கூறும்போது,‘‘டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அவர் உயிரிழக்க வில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சிறுவன் வசித்து வந்த இடத்தில் சுகாதாரப் பணிகள் மேற்கொண்டு வருகிறோம்’’ என்றனர்.