அர்ச்சகர் சரவணன் 
தமிழகம்

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அர்ச்சகர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மடவாளம் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அங்கநாதீஸ்வரர் கோயில் அர்ச்சகர் உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியில் பிரசித்திபெற்ற அங்கநாதீஸ்வரர் கோயில் உள்ளது. அதே பகுதியைச் சேர்த்த சரவணன் (53) என்பவர், இந்தக் கோயில் அர்ச்சகராக பணியாற்றி வந்தார்.

இவரது வீட்டில் கடந்த சில நாட்களாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று நடைபெற்ற புனரமைப்புப் பணியின்போது சரவணன் வீட்டில் இருந்தார். அப்போது, திடீரென வீட்டின் சுவர் இடிந்து சரவணன் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர், அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் சரவணன் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT